கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா!!

கந்தர்வகோட்டை ஆக 25

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதம் தோறும் வெளியிடப்பட்டு வரும் துளிர் இதழில் மாணவர்களுக்கு துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அ.ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசும்பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

துளிர் மாத இதழ் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மாதம் தோறும் வெளிவரும் ஒரே அறிவியல் இதழ் துளிர் மாத இதழாகும் என்பதாகும். துளிர் இதழ் பெறுவதற்கு மாணவர்கள் துளிர் திறனறிவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் எழுத வேண்டும் அவ்வாறு எழுதினால் மாதம் தோறும் துளிர் இதழ் கிடைக்கும். துளிர் அறிவியல் இதழில் மூலம் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பை துளிர் மாத இதழ் வழங்கி வருகிறது.துளிர் இதழை மாணவ, மாணவிகள் வாசிக்க வேண்டும் என பேசினார்.

துளிர் வாசகர் திருவிழாவில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகள் ஹஸ்விந்ராஜ் என்ற மாணவர்
இமயமலையும் மரியானா அகழியும் என்ற தலைப்பிலும்
மௌனிஷ் என்ற மாணவர்
சப்போட்டா வின் சபதம் என்ற தலைப்பிலும்,
.முகமது ஆசிக்
சுற்றுச்சூழலை மக்கள் மறக்கலாமா?
ஹரிஹரசுதன்
எச்சரிக்கை எச்சரிக்கை
ஸ்ரீ தேவா என்ற மாணவர் ஒகாபி தலைப்பிலும்,
லோகேஷ் என்ற மாணவர்
அழியாத சுவடுகளில் அறிவியல் என்ற தலைப்பிலும்
சபரி என்ற மாணவர்
குட்டி ஷெர்லாக் ஹோம்ஸ் மண்ணில் பதித்த தடங்கள் என்ற தலைப்பிலும்
சஜித் ரோஜன்
உமிழ்நீரின் அறிவியல் ,
பிரியதர்ஷினி
ஒற்றுமையே உயர்வு,
ரித்திகா ஸ்ரீ
அரசரின் கிரீடமும் ஆர்க்கிமிடிஸீம்,
சக்தி பிரியா
விரல் பொம்மை,
மிதுன் மணியன்
அறிவியல் பூங்கா,
பிரியதர்ஷினி எல்லை இல்லா வானம்,
பிருந்தா வானவில்,
பிரியதர்ஷினி கருத்தனும் மறைமானும்,
தரணிகா
பள்ளிக்கூடம் போக வேண்டும் என்ற தலைப்பிலும்,
கலை அருள் செல்வி
குழந்தை கவிஞர் அழ‌.வள்ளியப்பா
கவின் என்ற மாணவர்
வேண்டும் சமாதானம் என்ற தலைப்பிலும்,
தரணிதரன் என்ற மாணவர் அறிவியல் அதிசயம் தலைப்பிலும் துளிர் வாசகர் திருவிழாவில் கட்டுரைகளை வாசித்தனர். நிறைவாக மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts