பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் பணிகள் முடியாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் கொந்தளிப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (NH 83) புளியம்பட்டி அருகே தொடர் விபத்துகள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிய வேன் (TN 41 AF 7383) ஒன்று நேற்று இரவு புளியம்பட்டி பகுதியில் வந்தபோது சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஆண், பெண் சுற்றுலாப் பயணிகள் சிலர் லேசான காயமடைந்தனர். அவர்கள் உடனடியாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலையில் புளியம்பட்டி பகுதியில் இயங்கி வரும் உதய கிருஷ்ணா நெய் கம்பெனி அருகே அமைக்கப்பட்டுள்ள பாலம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் மூடியே உள்ளது.

மேலும்
சாலை முழுவதும் போதிய மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. பாலத்தின் கீழ் உள்ள விளக்குகள் மற்றும் சர்வீஸ் சாலைப் பணிகள் அரைகுறையாகவே உள்ளன. அமைக்கப்பட்டுள்ள விபத்து எச்சரிக்கைப் பலகைகள், இரவில் வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்குச் சரியாகத் தெரிவதில்லை.
சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது.

இப்பகுதியில் கடந்த 20 நாட்களில் மட்டும் 4 விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலங்கள், சர்வீஸ் சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் என எந்தவொரு அடிப்படைப் பணிகளும் முழுமை பெறாத நிலையில் கோமங்கலம் புதூர் பகுதியில் சுங்கச்சாவடியைத் திறந்து NHAI நிர்வாகம் கட்டணம் வசூல் செய்து வருகிறது. ”
தமிழகத்திலேயே இந்தச் சுங்கச்சாவடியில் தான் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எந்த வசதியும் செய்து தராமல் கட்டணம் மட்டும் வசூலிப்பது மிகக் கண்டிக்கத்தக்கது எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும் NHAI நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு விபத்துகளைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பணிகளையும் முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். அதுவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்

-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts