
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை வட்டார பகுதிகளில் அதிகளவு தனியார் தேயிலை நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பல வருடங்களாக எப்சி மற்றும் இன்சூரன்ஸ் டாக்ஸ் போன்ற அரசு ஆவணங்கள் சரியான வகையில் இல்லாமல் பயன்படுத்துகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாகனங்களை சோதனை செய்வதற்கு வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் வாகன சோதனை அதிகாரிகள் வந்து செல்கின்றனர். அதிக பாரங்களை ஏற்றி வரும் தேயிலை எஸ்டேட் வாகனங்களை இவர்கள் கண்டுகொள்வதில்லை.
வால்பாறை வட்டார பகுதிகளில் உள்ள ஆட்டோ,கால் டாக்ஸி,சுற்றுலா வாகனங்கள், மினி லாரி மற்றும் கனரக வாகனங்களில் ஓட்டுனர்கள் எப்சி, இன்சூரன்ஸ் டாக்ஸ் ஆகியவை சரியான முறையில் வைக்கின்றனர். எஸ்டேட் பகுதிகளில் இவைகள் இல்லாமலே அதிக அளவு எஸ்டேட் வாகனங்கள் வால்பாறை வழியாகவும் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இதற்குக் காரணம் என்னவென்று புரியாமல் தவிக்கும் வால்பாறை வட்டார ஓட்டுனர்கள் கூறுகையில்; “எங்கள் வாகனத்திற்கு அனைத்து உதிரி பாகங்கள் மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்கிறார்கள் எஸ்டேட் வாகனங்களை செய்வதில்லை. அந்த வாகனங்களையும் சரிவர பரிசோதனை செய்ய வேண்டும்.” என கோரிக்கை வைக்கிறார்கள்.
இதனை கண்டாவது வால்பாறை வட்டார பகுதியில் உள்ள எஸ்டேட் வாகனங்களை பரிசோதனை செய்வார்களா..? என கேள்விக் குறியாக மட்டும் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்.









