“இயற்கையை மனிதன் பாழாக்கியதன் விளைவே இயற்கைச் சீற்றங்கள்” பிரபஞ்ச அமைதி ஆசிரம நிறுவனர் தின விழாவில் குருஜி ஷிவாத்மா பேட்டி!!

 

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா

கோவை, ஆக.30 கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள்,
பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆசிரமத்தின் நிறுவனர் தின விழா மற்றும் குரு ஜெயந்தி விழா ஆசிரம வளாகத்தில் அமைதியான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஆசிரம வளர்ச்சிக்குத் துணைநிற்கும் நன்கொடையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் மகிழ்விக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
சமுதாயத்திற்கு உண்மையாகவும், நேர்மையாகவும், அறவழியிலும் தொண்டாற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழக அரசு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். நற்பணிகளைச் செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்க அரசு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.

நாம் எந்த அளவுக்கு இயற்கையைப் பாதுகாக்கிறோமோ, அந்த அளவுக்கு இயற்கையும் நம்மைப் பாதுகாக்கும். ஆறுகள், நீர்நிலைகளின் இயல்பான பாதைகளை ஆக்கிரமித்து, நமக்குச் சாதகமான வாழ்விடங்களாக மாற்றியதே தற்போதைய பேரழிவுகளுக்கு முக்கிய காரணம்.

மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக இயற்கையைச் சுரண்டி பாழ்படுத்தியதன் விளைவாகவே பெருவெள்ளமும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. ஐம்பூதங்களும் மனித குலத்திற்குப் பயன்படவே உருவானவை; அவற்றைச் சேதப்படுத்தாமல் நேசித்து வாழ்வதே நமக்குப் பாதுகாப்பானது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டியும் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம் என்று அவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், சூலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மற்ற கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள், தொழிலதிபர் சக்திவேல் முருகன், வெற்றி பார்மசி சரவணன், பாரதி அறக்கட்டளை பாரதிராஜா, மற்ற அமைப்புகளை சார்ந்தவர்கள், கணேஷ், பழனிசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts