வால்பாறை பள்ளி கட்டிடங்கள் மற்றும் கழிப்பிட வசதிகளை ஆய்வு செய்ய கோரிக்கை!! வட்டாட்சியரிடம் தமிழக வணிகர் சம்மேளனம் மனு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் எஸ்டேட் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் வால்பாறை வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் P. பரமசிவம் வழங்கியுள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது : வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளில் சரியான கட்டிட உள்கட்டமைப்பு மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்கள் தரமாகவும் விளையாட்டு மைதானம் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகளுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​அதேபோல் மலைப்பகுதியான வால்பாறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பல பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமான சுகாதார முறையில் இல்லை என்றும் சில பள்ளிகளில் கழிப்பிட வசதிகளே இல்லை என்றும் தெரியவருகிறது.

கழிப்பிட வசதி இல்லாத சூழல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய தன்ற சான்றிதழ் வழங்கி குறைகளை உடனே நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்

-𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts