
விளாத்திகுளம்: வீ த லீடர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்கள், பெண்கள், சிறுவர்–சிறுமியருக்கு தனித்தனி போட்டிகள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீ த லீடர்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பில் மினி மாரத்தான் போட்டி ஆக.30 க்கு நடைபெற்றது.
விளாத்திகுளத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 291 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.
இதில் ஆண்கள் 75 பேர், பெண்கள் 47 பேர், சிறுவர்கள் 105 பேர், சிறுமிகள் 64 பேர் என மொத்தம் 291 பேர் பங்கேற்றனர்.
இந்த மினி மாரத்தான் போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கடம்பூர் அருண்ராஜா கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மரங்களை வளர்ப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் வகையில் இந்த மினி மாரத்தான் நடைபெற்றது. “மாற்றுவோம்… மாற்றுவோம்” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் பங்கேற்பாளர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவு:-
முதலாவதாக நடைபெற்ற ஆண்களுக்கான 14 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரி சரத் முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார்.
பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் இரண்டாம் பரிசையும், ஊட்டியைச் சேர்ந்த நரேந்தர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவு:-
தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 10 கிலோமீட்டர் மினி மாரத்தான் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த அஞ்சலி முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார்.
புதூரைச் சேர்ந்த உதயா தர்ஷினி இரண்டாம் பரிசையும், ஊட்டியைச் சேர்ந்த சோனாலி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
சிறுவர்கள் பிரிவு:-
சிறுவர்களுக்கான 4 கிலோமீட்டர் போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவினாஷ் முதல் பரிசையும், விளாத்திகுளத்தைச் சேர்ந்த கௌதம் இரண்டாம் பரிசையும், சிவகாசியைச் சேர்ந்த இளையராஜா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
சிறுமியர் பிரிவு:-
சிறுமியருக்கான 4 கிலோமீட்டர் போட்டியில் புதூர் அரசு பள்ளி மாணவி முருகசெல்வி முதலிடம் பிடித்து முதல் பரிசை பெற்றார்.
ஆனைக்கூட்டத்தைச் சேர்ந்த சுதந்திர லட்சுமி இரண்டாம் பரிசையும், அதே பகுதியைச் சேர்ந்த நிபிதா பாண்டி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பங்கேற்பாளர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காட்டுராஜா, நேஷனல் கந்தசாமி, காமாட்சி அருணாச்சலம், பொன்ராஜ், மகேஸ்வரன், சிவபெருமாள், சரண்ராஜ், சீனி, தங்கம், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சத்தியசீலன், மாதவன், ராஜேஷ் கனி ஆகியோரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சீனிவாசன், வேல்முருகன் உள்ளிட்ட விளாத்திகுளம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.













