
கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள அப்போலோ டயாக்னாஸ்டிக்ஸ் மையத்தில் நரம்பியல் துறை சார்ந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய சென்னை அப்போலோ நரம்பியல் துறை மருத்துவர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்தியாவில் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏறக்குறைய 10% அளவில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
பரவக்கூடிய மூளைத் தொற்று நோய்கள் குறைந்து வரும் வேளையில், பக்கவாத நரம்பு சார்ந்த நோய்கள் அதிகமாகி வருவதாகவும், தலைவலி, வலிப்பு, பக்கவாதம், செரிப்ரல் பால்ஸி, அல்சைமர், பார்க்கின்ஸன்ஸ் போன்ற நரம்பு மண்டலப் பிரச்சினைகள் பலரையும் பாதிக்கின்றன என்றும் மருத்துவர்கள் விளக்கினார்.
மேலும், மைக்ரேன் தலைவலியைத் தடுக்க பொடுலினம் டாக்சின் ஊசிகள் மற்றும் எலக்ட்ரிக் நரம்பு ஊக்கிகள் போன்ற நவீன முறைகள் பயன்பாட்டில் உள்ளதாக ஆர்.எஸ்.புரம் அப்போலோ டயாக்னாஸ்டிக்ஸ் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வலிப்பு நோய்க்கு புதிய மருந்துகள் மற்றும் ‘வேகஸ் நரம்பு ஸ்டிமுலேட்டர்ஸ்’ போன்ற கருவிகள் மூலமும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்குள் இரத்தக் கட்டிகளைத் தகர்க்கும் ‘த்ராம்போலிடிக்ஸ்’ மருந்து மற்றும் கதீட்டர் மூலமான மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி முறைகள் மூலமும் உயிர் காக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
பார்க்கின்ஸன்ஸ் மற்றும் அல்சைமர் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய PET ஸ்கேன், ‘டீப் பிரைன் ஸ்டிமுலேஷன்’ (DBS), மற்றும் ‘ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட்’ போன்ற நவீன அறுவை சிகிச்சை முறைகளும் கைக்கொடுப்பதாக நரம்பியல் துறை மூத்த மருத்துவர்ஸ்ரீசாந்த் ஸ்ரீநிவாசன் கூறினார்.
-சீனி,போத்தனுர்.














