
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா குரங்கு மூடி எஸ்டேட் பகுதியில் கட்டிட வேலைக்கு வந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று மதியம் வேலையை முடித்துவிட்டு நான்கு பேர் இரண்டு முப்பது மணி அளவில் டேம் நீரில் குளிக்க சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரான்சிஸ் என்பவர் மட்டும் தண்ணீரில் மூழ்கினார். சிறிது நேரம் நண்பர்கள் தேடி பார்த்ததும் அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள ஆட்களை அழைத்தனர் .உடனே வால்பாறை தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வந்து பிரான்சிஸ் உடலை கைப்பற்றினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை குறித்து வால்பாறை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யகுமார் பேபி











