இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்!!

கோவை குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில், முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் ‘சிறகுகள் 2026 , முன்னாள் மாணவர்களின் சாதனைகள் மற்றும் படைப்பாற்றல் அங்கீகாரம்’ நிகழ்ச்சி,குமரகுரு வளாகத்தில் உள்ள சாராபாய் கலாம் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட இயக்குநர் ராம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கல்லூரியின் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் பயின்று தமிழ் திரையுலகில் சாதனை படைத்து வரும் முன்னாள் மாணவர்களான பாடலாசிரியர் மதி புகழேந்தி மற்றும் இளம் திரைப்படத் தொழில்முனைவோர் சுரேந்தர் நளினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பாராட்டினர்.
2022–2025 கல்வியாண்டு காலகட்டத்தில் அகரம் உதவித்தொகை பயின்ற மாணவரான மதி புகழேந்தி, இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். கல்வி உதவித்தொகையின் ஆதரவுடன் தனது படைப்பாற்றலை வளர்த்து, எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் முன்னேறியுள்ள அவரது பயணத்தை பாராட்டினர்.
அதேபோல், ‘ஆழி பிக்சர்ஸ்’ நிறுவனம் மூலம் திரைப்படத் தொழில்முனைவோராக வளர்ந்து வரும் சுரேந்தர் நளினி, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் இந்திய அளவிலான அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளதற்காகக் கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, இயக்குநர் ராம் பங்கேற்கும் ‘சொற்களிலிருந்து திரை வரை – சமகாலத் திரைப்படங்களில் படைப்பாற்றல் மிக்க தமிழ்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் தமிழ் படைப்பெழுத்து, கதை சொல்லும் நுட்பம், பாடல் வரிகள், காட்சித் தொடர்பியல் மற்றும் திரைப்பட உருவாக்கம் குறித்து மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராமுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு, இளம் எழுத்தாளர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு கிடைத்தது.
கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், குமரகுரு கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் திரைத்துறை விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.. முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன், கல்வி நிறுவனங்களுக்கும் படைப்புத் துறைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தி, அடுத்த தலைமுறை படைப்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.




