
பொள்ளாச்சி அக். 12 மலைப்பாதைகளில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் மற்றும் குளிர்பானப் பாட்டில்கள், தின்பண்ட நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்ட எந்தக் கழிவையும் வனப்பகுதிக்குள் வீசக் கூடாது என்று இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா. வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மலைப்பாதைகளின் இருபுறமும் கிடக்கும் நெகிழிப் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், காலி கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை சமூக அமைப்புகள் ஒவ்வொரு மாதமும் வனத்துறையினருடன் இணைந்து அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் தூய்மைப்படுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் குப்பைகள் சேர்வதைத் தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
அரசுத்துறைகளுடன் இணைந்து செயல்பாடு வனத்துறையினரின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களிலும் பயணத்தின்போதும் வனப்பகுதியில் குப்பைகளை வீசக் கூடாது என்ற அறிவிப்புகளை வெளியிடவும் கோரப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து வனப்பகுதிகளில் குப்பைகள் சேர்வதைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நமது ஆதங்கம் ஒன்றுதான் குப்பைகளை மீண்டும் மீண்டும் அகற்றுவதற்குப் பதிலாக அவை வனத்திற்குள் வீசப்படுவதே தடுக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆதங்கம் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுற்றுலா இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொறுப்புடன் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வனத்தைப் பாதுகாப்பது அரசுத்துறைகளின் பொறுப்பு மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ள அறக்கட்டளை வனத்துறையினருடன் கைகோர்த்து, சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க அழைப்பு விடுத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝐒𝐓𝐀𝐑 𝐌.சுரேஷ் குமார்.






