வால்பாறையில் வனவிலங்கு தொல்லை வனத்துறை நடவடிக்கை எடுக்க வணிகர் சம்மேளனம் கோரிக்கை!!

வால்பாறை அக்டோபர் 12 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனவிலங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வணிகர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுதொடர்பாக வனத்துறை அமைச்சருக்கு சம்மேளனத்தின் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதிகளில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வனவிலங்கு தொல்லையால் மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அடிப்படைத் தேவைகளுக்காகவும் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காகவும் வெளியே செல்வது கடினமாகியுள்ளது.

குறிப்பாக வாட்டர்பால், ரொட்டிக்கடை, ஷேக்கல்முடி, ஈ.டி.ஆர் உள்ளிட்ட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் கரடி தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் நலன் கருதி எஸ்டேட் பகுதிகளில் உள்ள கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றும் குடியிருப்புகளைச் சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள செடிகள், மரக்கிளைகளை வெட்டி, வனவிலங்குகள் பதுங்கியிருக்கின்றனவா என்பதை எளிதாகக் கண்டறிய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வால்பாறை வனத்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சம்மேளனத்தின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் பி. பரமசிவம் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝐒𝐓𝐀𝐑 𝐌.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts