தமிழகத்தில் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாக ஸ்டார்ட் அப் தமிழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மிஷன் இயக்குநர் சிவராஜன் ராமநாதன் மற்றும் தைரோ கேர்சின் நிறுவனர் டாக்டர் வேலுமணிஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கோவை ஈச்சனாரி இரத்தினம் கல்லூரி வளாக பகுதியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டரில் லெட்ஸ் எனும் தலைப்பில் ஸ்டார் அப் என்னும் நிகழ்ச்சி நடைப்பெற்றது . இதில் கோவையை சுற்றியுள்ள பல்வேறு துறையினைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் ,மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். ஏ.ஐ.சி ரைசின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மதன் ஏ செந்தில் தலைமையில் நடைபெற்ற இதில், ஏ.ஐ.சி ரைசின் செயல்பாட்டு இயக்குநர் டாக்டர் நாகராஜ் வரவேற்புரையாற்றினார்..இதில் தமிழக ஸ்டார்ட் அப் இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மிஷன் இயக்குநர் சிவராஜன் ராமநாதன் , மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் துணை இயக்குநர் . உதயசங்கர் மற்றும் தைரோ கேர்சின் நிறுவனர் டாக்டர் வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், தற்போதுள்ள ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றியும், வளரும் தொழில்முனைவோர்கள் தமிழகத்தின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
மேலும் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் எவ்வாறு ஆதரிக்கிறது மற்றும் வருங்கால தொழில்முனைவோருக்கு அணுகக்கூடிய பல திட்டங்களைப் பற்றியும் எடுத்து கூறினர். தொடர்ந்து ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்க ஸ்டார்ட்அப் இந்தியா முதலீட்டு நிதி திட்டத்தின் கீழ் ஏஐசி ரைஸ் பெற்ற அறிவிப்பான ஸ்டார்ட்அப் முதலீட்டு நிதி இந்தியா சீட் ஃபண்ட் ஸ்கீம் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும் இதில் குறிப்பாக பெண் தொழில் முனைவோர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்..இந்த சந்திப்பின் போது,இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.