கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 65 வயது மதிக்க தக்க மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியை அடுத்துள்ள ஏரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தனது வீட்டிற்கு அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற 27 வயது இளைஞர் அந்த வழியாக சென்றுள்ளார். மூதாட்டி தனியாக நின்று மாடு மேய்த்து கொண்டிருப்பதை நாகராஜ் பார்த்துள்ளார்.
பின்னர் நீண்ட நேரம் அங்கேயே நின்று மூதாட்டியை அடைய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.
உடனே மூதாட்டியின் அருகில் சென்று அவரை கீழே தள்ளி விட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர்.
பொதுமக்கள் வருவதை பார்த்ததும் நாகராஜ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை கைது செய்தனர். மூதாட்டியை 27 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.