தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளையின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் அவிநாசி ரோடு சாமுண்டிபுரம் கிரில் கேட் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது உள்ள சூழ்நிலையில் விலைவாசியின் கடுமையான உயர்வால் தொழில் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.அதேபோல் இரும்பில் கதவு ஜன்னல் ஷட்டர் போன்ற வேலைகளை செய்யும் கிரில் தயாரிப்பாளர்களின் தொழில் வாய்ப்புகளும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் விலை மாறுபாடுகளால் தொழில் நசிந்து வருவதாகவும் இதை சரி செய்யும் பொருட்டு சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கிரில் தொழில் துறையினரும் ஒரே விலையில் பொருட்களை தயார் செய்து கொடுப்பது என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
இதில் தங்களது வாடிக்கையாளர் களிடம் நன்மதிப்பை பெறுவதற்காகவும் தொழிலாளர்களின் நலனை கருதியும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர் வடிவேல் மற்றும் செயலாளர் குணசேகரன் பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கேட் கிரில் ஒர்க்ஸ் செய்யும் தொழிலாளர்களை அழைத்து ஆலோசனை செய்து சங்கத்தின் மூலமாக விலையை நிர்ணயித்துள்ளனர்.
இதனால் அனைவரும் விலை வேறுபாடு இன்றி பொருட்களை கொடுக்க முடியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும்.இதன் மூலம் தொழில் வளம் பெறும் .இந்த முடிவை சங்கத்தின் சார்பாக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாட்ஷா, திருப்பூர்.
2 Responses
அருமையான பதிவு
all tamilnadu Fallo this massage