கோவில்பட்டி அருகே அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!!!.
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9. 55 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மாணவர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் அ. தி. மு. க. ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.