கோவை:
கோவை செல்வபுரம் தில்லை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரிஸ்வான். இவருடைய ஆட்டோவில் ஏறிய பயணி ஒருவர் விலை உயர்ந்த 6 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வாகனத்தில் தவறவிட்டு சென்றுவிட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மத்திய பகுதி செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா அவர்களை தொடர்பு கொண்டு தகவல் சொல்லப்பட்டது. உடனடியாக பகுதி நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையம் சென்று உதவி ஆணையர் அவர்களிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.
காவல் துறை உதவி ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர் செயலை பாராட்டினார். மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு உதவியாக இருந்த மஜக-வினரையும் வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்வில் மஜக மத்திய பகுதி பொருளாளர் அபு பர்க்கத், மஜக துணை செயலாளர் ஷாஜஹான், மஜக துணை செயலாளர் மொய்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.