கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள் துவங்கி வைத்து மாரத்தான் ஓடிய சைலேந்திரபாபு!!

கோயம்புத்தூர் மாரத்தான்

கோயம்புத்தூர் மாரத்தான்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள்! துவங்கி வைத்து மாரத்தான் ஓடிய சைலேந்திரபாபு.! 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை,பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள் நடைபெற்றது.
பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது.

இதனை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து துவங்கி வைத்தார்.தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார். அவருடன் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடினர்.

மூன்று பிரிவாக நடைபெற்ற போட்டியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த மாராத்தானில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.
21 கிலோமீட்டரில் 2500 க்கும் மேற்பட்டோரும் ,10கிலோ மீட்டரில் 5000க்கும் மேற்பட்டோரும்,5 கிலோமீட்டரில் 8000க்கும் மேற்பட்டோரும் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு பேசும்போது:

“கோவை மாராத்தான் மிக முக்கியமான மாரத்தான்களில் ஒன்று. கடந்த 10 வருடங்களாக தான் மாராத்தான் பழக்கம் பொது மக்களுக்கு வந்து கொண்டுள்ளது. இன்று கோவையில் நடைபெற்ற மாராத்தானில் 18,000 பேர் ஓடி உள்ளனர். இப்பொழுது அனைவருமே ஓடுகின்றனர். ஓடும் பொழுது உடல் மற்றும் மனநலம் நன்றாக இருக்கும். கோவையில் இன்று மாநகர காவல் ஆணையாளர், துணை ஆணையாளர் உட்பட 50 காவலர்கள் மாராத்தானில் ஓடினர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தமிழக காவல்துறையினர் அகில இந்திய போட்டிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வாலிபால், ஃபுட்பால், ஹாக்கி, துப்பாக்கி சுடுதலிலும் முன்னிலையில் உள்ளனர். எல்லா விளையாட்டிலும் முன்னிலையில் உள்ளனர்.

அதிக தூரம் ஓடினால் உடல் நலம் நலமாக இருக்கும். ஒரு மணி நேரம் கண்டிப்பாக சைக்கிள், ஓட்டம் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.”

பேட்டி :- சைலேந்திரபாபு, டிஜிபி.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

– சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்.. கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை..! முன்னணி மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய பள்ளி நிர்வாகம் கௌரவிப்பு!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp