
ஆண்டித்தோப்பு மாமூட்டு தரைபாலத்தை உடனடியாக சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகா, தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டித்தோப்பு மாமூட்டு தரைபாலம் சேதமடைந்து ஆபத்தின் விளிம்பில் காணப்படுவதால் இந்த பாலத்தை கடந்துவரும் மண்ணடி, தென்பாறை பொதுமக்கள், விவசாயிகள், பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பள்ளிக்குழந்தைகளை வேனிலும்,ஆட்டோவீலும் ஏற்றிவிடும் தாய்மார்கள் பள்ளி சென்றடையும் வரையும் அதுபோல் பள்ளிசென்று வீடு திரும்பும் வரையிலும் தன் குழந்தைகளின் நலன்கருதி ஆழ்ந்த பயத்தில் உறைந்துள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்பபடையில் பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள்,பொதுமக்கள் நலன்கருதி இந்த தரைபாலத்தினை செப்பனிட்டு புதிய பாலத்தினை புதுப்பிக்க வேண்டும்.


விவசாயிகள், பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் நலன் காத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கையளிக்கிறோம். என்று எஸ்.நாராயணசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
மாவட்டத்துணைசெயலாளர், கன்னியாகுமாரி மாவட்டம். கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.












