தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று
சென்னை அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் துவக்கி வைத்தார்.
இதே போல் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பேரூர் மேல வீதியில் உள்ள முதல் நிலை அங்கனவாடியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை குடந்தை மேற்கு ஒன்றிய கழகச்
செயலாளரும் தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருமான S.K.முத்து செல்வம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் சுவாமிமலை பேரூர் செயலாளர் S.பாலசுப்பிரமணியம், பேரூராட்சி
பெருந்தலைவி S.வைஜெயந்தி சிவகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் மனிதநேய மக்கள்
கட்சியினுடைய பேரூர் தலைவர். M. ஃபுர்க்கான், மாவட்ட (ம. அ) பொருளாளர். M.ஷபானா புர்க்கான், பேரூர் செயலாளர்.
அசாருதீன், பொருளாளர் அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
-M.சுரேஷ்குமார்.