கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் கட்டபட்ட பேருந்து நிலையம் 2007ம் ஆண்டு நாற்கர சாலை அருகில் கூடுதல் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக முழுமையாக கூடுதல் பஸ் நிலையம் செயல்படவில்லை. இதனால் அனைத்து பஸ்களும் கூடுதல் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சர்வீஸ் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்ந்துவருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம். இதனால் நாளுக்குநாள் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருவதால் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூடுதல் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும், தேசிய நெஞ்சாலையில் பயணிகள் ஏற்றி, இறக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையெடுத்து கூடுதல் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர ஆட்சியர் செந்தில்ராஜ் நடவடிக்கை மேற் கொண்டார். ஆனாலும், அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் உள்ளே வராமல் நாற்கர சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தன.
மேம்பால பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் கண்ணாடிகள் அமைக்கப்படும். தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்திற்கு இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு சர்வீஸ் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் 5 மாதத்திற்கு தற்காலிக தினசரி சந்தை செயல்படும்’ என்றார். ஆய்வின் போது கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தாசில்தார் சுசீலா, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.