அதிகாரிகளை எதிர்த்து போராட்டம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஹரிஜன்ஸ் மலையாளம் லிமிடெட் தேயிலை தோட்ட உற்பத்தி நிர்வாகத்தை சார்ந்த பண்ணையார் எஸ்டேட் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் குறிப்பாக யானையின் தாக்குதல் காரணமாக ரேஷன் கடைகளும் அப்பகுதி தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளிலும் சேதமடைந்து காணப்படுகிறது.
பலமுறை தேயிலை உற்பத்தி நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் முறையீடு செய்துள்ளனர். ஆனாலும் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் இருப்பிடத்தையும் ரேஷன் கடையும் சரி செய்து தரவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் நேற்று தேயிலை உற்பத்தி நிர்வாக அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது 10 நாட்களுக்குள் அனைத்து சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தருவதாகவும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்போம் என்றும் தேயிலைத் தோட்ட உற்பத்தி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.












