இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் கூட குடி தண்ணீர் தட்டுப்பாடு ??
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் இயற்கை அழகையும் ஆங்காங்கே ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல அணைகளை உள்ளடக்கி காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் கோடை காலம் ஆரம்பிக்கும் போதே குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பொதுவாக வறட்சியான பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இயற்கை அழகை கொண்ட மூணார் மலை பிரதேசத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியான சாந்தம்பரை பகுதியில் உள்ள ராமக்கல் மேடு என்ற பகுதியில் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர்கள் சென்று தண்ணீர் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ராமக்கல் மேடு பகுதி பஞ்சாயத்து குடி தண்ணீர் கொடுக்க பல முயற்சிகள் எடுக்க துவங்கி போதும் அதனை முழுமையாக நிறைவு செய்யாமல் பதியலேயே நின்று விட்டன. பலமுறை மக்கள் அரசாங்கத்திடம் முறையிட்டும் பயனில்லை. தற்பொழுது 600லிட்டர் தண்ணீர் 300ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பஞ்சாயத்து உடனடியாக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அனைத்து மக்களும் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியன செய்தி வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் என்பது இடம் மற்றும் காலம் தாண்டி அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்சினையாக இருப்பதால் அணைவரும் உணர்வடைந்து தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கேற்ற அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.












