NALAIYA VARALARU
பைசன் வேலி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஒருவர் மரணம்??
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதிக்கு மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். மூணாறில் இயற்கையை கண்டு களித்த அவர்கள் இடுக்கி அருகே உள்ள செம்மனூர் பகுதிக்கு சொந்தக்காரரின் வீட்டிற்கு செல்வதற்காக மூணாறில் இருந்து கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக கேப் ரோடு வந்தடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கிருந்து மிகவும் சரிவான சாலையான பைசன் வேலி சாலையை வழியாக சென்ற போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மதுரை திருநகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அவருடன் பயணம் செய்த காமாட்சி கண்ணன் என்பவர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். அவரை உடனடியாக மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்த பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றன. பைசன் வேலி சாலை வழியாக செல்பவர்கள் மிகவும் கவனத்துடனும் பாதுகாப்புடனும் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.