தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர்களுக்கு புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோகிலா தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி, சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்பெக்டர் சாந்தி, சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ், குமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜகுமாரி குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், பெருமாள், குமரி மாவட்டம் மனவாளகுறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், காந்திமதி தென்காசி மாவட்டம், பணவடலிசத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கோமதி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.