மாச்சம்பாளையத்தில் 200 ஆண்டுகள் பழமையான மயானம் குப்பைமேடாக மாறிவரும் அவலம்!!!
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாச்சம்பாளை யத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயானம் ஒன்று உள்ளது. அந்த சுற்று வட்டார பகுதி முழுவதும் அந்த மயானத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அந்த மயானம் முழுவதும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. இரும்பு கழிவுகளும், பஞ்சு கழிவுகளும் குவியல், குவியலாக குவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறிது மழை பெய்தாலும் அந்த குப்பை மேட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. நள்ளிரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் ஆதிக்கமும் அப்பகுதியில் அதிகமாக உள்ளது. மதுப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். விரைவில் அந்த குப்பைமேடுகளை அகற்றி சுத்தமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.