அப்போது அவர் கூறும்போது திருநெல்வேலி சரகம் , கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தும் , திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி , திருநெல்வேலி , தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்தார் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , அதனில் சம்பந்தப்பட்டுள்ள 27 எதிரிகள் கைது செய்யப்பட்டும் , அவர்களிடமிருந்து ரூபாய் 6,02,804 / – மதிப்புள்ள 603 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் எதிரிகள் பயன்படுத்திய 04 இருசக்கர வாகனங்களும் மற்றும் 02 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் 79 பேர் கைது செய்யப்பட்டும் , 16 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் . மேலும் 552 பேரிடம் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது .என. கூறினார் மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளச்சல் உட்கோட்ட முகாம் அலுவலகம்,தக்கலை மதுவிலக்கு காவல் நிலையம், கொற்றிகோடு காவல் நிலையம், ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்பின் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற தோல்பாவை கூத்து, ஜிம்னாஸ்டிக், நிகழ்ச்சிகள், சுமார் 1500 மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை உட்கோட்டத்துக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இதில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.