தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாகலாபுரம் கிராமத்தில் சசிகலா என்ற மாணவி மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். ஜூன் மாதம் நாளை வரலாறு புலனாய்வு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை அறிந்த தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக தலைவர் (எஸ்டி) ரா. பாலச்சந்திரபூபதி அவரகள் நாகலாபுரம் உமறுப்புலவர் தொழிற்பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டுக்கள் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் பாலச்சந்திரபூபதி அவரகள் பேசியது:
இந்த செய்தியை உலகத்திற்கு தெரியப்படுத்திய பத்திரிக்கை துறைக்கு என்னுடைய பாராட்டுக்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அதுவும் ஒரு கிராமத்தில் இருந்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது மிகவும் பெருமை மேலும் சசிகலா இனிவரும் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்து பிறந்த மண்ணுக்கும் படிக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். மத்திய மாநில அரசுகள் விளையாட்டுத்துறை என்று இட ஒதுக்கீடு வைத்துள்ளார்கள் அதன் மூலம் சசிகலா போன்ற திறமைசாலிகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என மாணவர்கள் மத்தியில் பேசினார்.
இந்த பாராட்டு விழாவில் நாகலாபுரம் பஞ்சாயத்து தலைவர் உலகம்மாள் முனியசாமி , ஊர் தலைவர் ஊர் செயலாளர், நாட்டாமை மற்றும் உமறுப்புலவர் அரசினர் பள்ளி திரு. ந. கணேசன் பயிற்சி அலுவலர், திருமதி. வே. மங்களசுந்தரி அலுவலக மேலாளர், திருமதி. பொ. பத்மாவதி இளநிலை பயிற்சி அலுவலர் பல மாணவர்கள் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.