தூத்துக்குடி மாவட்டம், கீழமுடிமண் கிராமத்தில் அமைந்துள்ள புனித வளன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா அருகில் 2 நாட்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
முதல் நாள் வெள்ளி விழா நன்றித் திருப்பலி , மேதகு ஐயர் ஸ்டிபன் அந்தோனி அவர்களின் சிறப்பு பிராத்தனைகள் பள்ளியின் வரலாறு பற்றி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பெட்ரம் பெறைரா இலங்கை அவர்கள், அமலன் தெலசால் சபை இந்தியா, தாமஸ் வால்ஸ் அவர்கள் அயர்லாந்து, அந்தோனி புஷ்ப ரஞ்சிதம் மதுரை , தாமஸ் ஓனியல் அவர்கள் அயர்லாந்து, பன்னீர்செல்வம் தூத்துக்குடி மறைமாவட்டம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அன்புநாதன் , முன்னாள் தாளாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2ஆம் நாள் நேற்று கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் மற்றும் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள் யூனியன் சேர்மன் துணை பெருந்தலைவர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதலில் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, அதான் பின்னர் பள்ளி வளாகத்தில் கழிப்பறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வரவேற்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் பள்ளியின் வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி கனிமொழி எம்.பி. அவர்கள் பேசியது :
“என்னுடைய தந்தை கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அவர் வாழ்க்கையில் பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. தோல்வி வரும் பொது அவர் என்றுமே துவண்டுபோனது இல்லை. ஒரு தேர்தல் தோல்வி, பிறகு அந்த நாள் அடுத்த வேலை என்ன, அடுத்த தேர்தலுக்கான பணி என்ன? என்று தான் சிந்திப்பதைத் தவிர, இந்தத் தேர்தல் முடிவு நமக்கு ஏற்றதாக இல்லை, மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை என கருதி வீட்டிலேயே உட்கார்ந்து மனதைக் கஷ்டப்படுத்திக் கொள்ள மாட்டார்.
தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரமான ஒன்று இல்லை. உங்கள் திறமை எதிலே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இந்த முறை இல்லை என்றால் அடுத்த முறை நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும் என்ற முழு மனதோடு நீங்கள் அதைச் செய்தால், நிச்சயமாக அத்தனை பேரும் வெற்றி பெற முடியும்” என பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் பேசியது:
தோல்வி இல்லாமல் வெற்றி என்பது எப்பொழுதும் இல்லை அப்படிப் பெற்ற வெற்றி நிரந்தரமாக இருக்காது, சந்திராயன் பற்றி செய்தி கேட்டிருப்பீர்கள் 4 ஆண்களுக்கு ஒரு சில காரணங்கள் தோல்வியடைந்தது, விடாமுயற்சியால் உலகமே பாராட்டும் அளவிற்கு தென் துருவத்தில் நிறுவப்பட்டது. இந்த வெள்ளி விழாவில் மாணவர்களுக்கு சொல்லிக் கொள்வது தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அனைவரும் வெற்றி இலக்கை அடைய முடியும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள், ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம். சி சண்முகையா அவர்கள், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலா யோகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
– முனியசாமி, ஒட்டப்பிடாரம்.