
தூத்துக்குடி: பள்ளி மாணவர்களுக்கு இந்திய சட்டங்கள் குறித்தும், சட்ட கல்வி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னை விநாயகா மிஷன்ஸ் சட்ட கல்லூரி சார்பாக உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர். சங்கமித்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். சட்ட கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த கருத்துக்களையும் கூறினார் . இதில் சரவண பெருமாள் , மகேந்திரன் , பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.











