மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று டிசம்பர் 5 அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இருந்தபோதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் நேரில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டு உள்ளனர் இதனால் சென்னை காவல்துறையினர் 50 பேருடன் சென்று அஞ்சலி செலுத்த தலைவர்களுக்கு கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலோடு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ அவர்கள் ஆலோசனைபடி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.மோகன் B.Sc., அவர்கள் ஏற்பாட்டில்.,
ஒட்டப்பிடாரம் பஜார் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு பூமாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் இலட்சுமணபெருமாள் அவர்கள் ,
ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் APC ஆதிலிங்கம், மாவட்ட எம்.ஜீ.ஆர் இளைஞரணி செயலாளர் ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி P.கோபி அவர்கள்
மாணவரணி இணைச்செயலாளர் திரு.S.R சின்னத்துரை அவர்கள்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் K.N.தினேஷ்குமார் அவர்கள்
மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.