கோவை சூலூர் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் ஹேமச்சந்திரன் இன்று காலை அசைவின்றி தனது அறையில் படுத்திருந்ததைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில்
பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரோட்டா சாப்பிட்டதால் தான் மாணவர் உயிரிழந்திருக்கிறார் என்கிற செய்தி காட்டுத்தீயாய் அப்பகுதியில் பரவி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.