கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆய்வு அலுவலர் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் முன்னிலையில் மக்கள் முதல்வர் முகாம் எப்படி நடத்தலாம், எங்கெங்கே நடத்தலாம், பொதுமக்கள் தாங்கள் குறைகளை எளிதாக தெரிவிக்க வசதிகள் ஏற்படுத்த வேண்டும், அவர்களின் குறைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் வருகின்ற 2-1-2024 முதல் 5-1-2024 வரை அட்டகட்டி, வால்பாறை நகராட்சி, சோலையார் டேம், முடீஸ் கருமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முதல்வர் முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம் வால்பாறை.