
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்ற மாணவர்க்கு பாராட்டு விழா. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக 9ஆம் வகுப்பு மாணவர் முகேஷ் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 10 கி.மீ தூர மிதிவண்டிப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் வென்றார்.
மேற்கண்ட மாணவரை பள்ளித்தாளாளர் சகோ.வின்சென்ட் மற்றும் தலைமையாசிரியர் சகோ.அன்புநாதன் ஆகியோர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவரின் பெற்றோர்களுக்கு லசால் தீபம் இல்ல இயக்குனர் சகோ.சந்தியாகு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் உடற்கல்வி ஆசிரியர் திரு.கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.











