
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (61) விவசாயி. இவரும், மனைவி சீதாலட்சுமியும் நேற்று கோவில்பட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துராஜ் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம்-எட்டயபுரம் ரோட்டில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத போது நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து சுப்புராசுவும், சீதாலட்சுமியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுப்புராஜ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். அவரது மனைவி சீதாலட்சுமியும் பலத்த காயமைடந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முத்துராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.












