தமிழக முழுவதும் வெயிலின் தாகம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் அங்கங்க நீர்மோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் தண்ணீர் பந்தலை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் இன்று அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான
கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.
இதில் கிழக்கு ஒன்றிய ஓட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன் கோவில்பட்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் மற்றும் சுப்புராஜ் எட்டையாபுரம் அவை தலைவர் கணபதி வார்டு செயலாளர்கள் கார்டன் பிரபு சின்னத்துரை கருப்பசாமி சிவ சிவா ஜெயக்குமார் சீனா என்ற முத்துகிருஷ்ணன் சொர்கன் சிவசங்கர பாண்டியன் மூர்த்தி செல்வி சாந்தி இரத்தின அதிமுக நிர்வாகிகள் வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந. பூங்கோதை.