Trending

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியம் என்ற தலைப்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!!

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் இணைந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாரத்தான் போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது ஆண்களுக்கு 10 கிலோமீட்டர், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

போட்டியில் 10 வயது முதல் 50 வரை உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவுக்கு முறையை 10,000 ரூபாய் 7,000 ரூபாய், 5000 ரூபாய் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறையை 5000, 3000, 2000 என பரிசுகள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கத்தினர் செய்திருந்தனர்.

-P.இந்திரன், கன்னியாகுமாரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp