
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு மற்றும் சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுவது,இன்னும் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அது போல் இன்று காலை சோலையார் டேம் செல்லும் வழியில் சேடல் டேம் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது மிகுந்த சப்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டதால் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சென்று மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்க்கையில் அந்த பகுதியில் உள்ள வீடு மண்சரிவில் சிக்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி வீட்டினுல் இருந்த பாட்டியும் அவருடைய பேத்தியும் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளனர் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பார்க்கையில் அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.











