கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு மீட்பு பணி உள்ளிட்ட அனைத்து வகையிலும் உதவிகள் செய்ய ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் தேசிய பொது செயலாளர் N. ஆனந்து உத்தரவின் படி,தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட அனைத்து அணியினர் சார்பாக,வயநாட்டில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை K.விக்னேஷ் மற்றும் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கோவை S.பாபு ஆகியோர் தலைமையில்,நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இதில் துணி வகைகள், பெட்சீட், லுங்கி,நைட்டி,டீ ஷர்ட்,பேண்ட்,உள்ளாடை,துண்டு,பிளாஸ்டிக் பொருட்கள் பக்கெட்,கப்பு,தட்டு, துடைப்பம், மளிகை பொருட்கள் சர்க்கரை, உப்பு, ராகிமாவு, பிஸ்கட் ,குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நாப்கின்கள்,சோப்புகள்,உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கான பணிகளில், கோவை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கிரிஷ், இளைஞரணி நிர்வாகிகள் செந்தில் குமார் , தௌபீக் , தொண்டரணி நிர்வாகிகள் பிரவீன், பவீன் , மாணவரணி நிர்வாகிகள் முத்து , 95-வது வார்டு அபீப் ரகுமான் , ஜம்னாசிர் ஜாஹிர் , ஷாஃபி, நசீர், ரியாஸ், அஷார் , பைசல், , ஃபாரூக்குறிச்சி பகுதி 96-வது வார்டு தொண்டரணி நிர்வாகிகள் கௌதம் , ஜெகன், மதுக்கரை ஒன்றிய தொண்டரணி நிர்வாகிகள் சிவா, சுரேஷ் , ரமேஷ், பாலா, கதிர், 100-வார்டு விக்னேஷ், கார்த்திக், ஜெயக்குமார், 98-வது வார்டு மோகன் , 97-வது வார்டு மகேந்திரன், உமையவள் செந்தில், ஸ்டுடியோ விக்கி , பூ பாலகிருஷ்ணன், கார்த்திகா , பிரியங்கா, ஜெனனி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.