தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழுவின் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வில்வமரத்துபட்டியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் இன்று பூமி பூஜை செய்து பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பொண்ணு விளாத்திகுளம் யூனியன் துணை சேர்மன் சுப்புலக்ஷ்மி சக்தி தங்கராசு ஒப்பந்தக்காரர் இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
ந.பூங்கோதை