கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீரிமேடு என்ற பகுதியில் பிலக்தகத்தில் உள்ள அகில் என்பவர் வீட்டின் அருகில் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனடியாக பீரிமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மரணமடைந்த அகில் என்ற நபர் பாக்கு மரத்தில் பிளாஸ்டிக் தாலினால் கட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடிக்கடி மரணமடைந்தவரின் வீட்டில் மது போதை குறித்த தகராறு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது தற்கொலை அல்ல கொலை என உறுதி செய்யப்பட்டு உறவினர்களை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.