
கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் நேற்றைய தினம் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை, கேட்டு அறிந்தார் 99 வார்டு மாமன்ற உறுப்பினர் மு. அசலாம் பாஷா.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உப்பு நீர் கலந்து வருவதாகவும், தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதாகவும், காலியிடங்களில் புல் மற்றும் செடிகள் அதிக அளவில் இருப்பதால் மக்கள் நடப்பதற்கும் வாகன ஓட்டிகள் செல்வதற்கும் சிரமாக உள்ளதாகவும் இது மட்டுமின்றி மின் கம்பங்களில் உராயப்படும் மரக்கிளைகளால் மின்வெட்டு ஏற்படுவதும் குப்பைகள் அகற்றுவது சம்பந்தமான கோரிக்கைகளை, மாமன்ற உறுப்பினர் இடத்தில் மக்கள் எடுத்துக் கூறினர். இந்த மக்கள் குறைகளை கேட்டறிந்த மாமன்ற உறுப்பினர். அஸ்லாம் பாஷா வரும் நாட்களில் இது அனைத்தையும் சரி செய்து தருகிறேன் என்று அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் அன்பாக கூறினார் . இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்ரீராம் நகர், அருள்முருகன்,நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.












