தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள பல்லாக்குளம் கிராமத்தில் காற்றாலை அமைக்கும் பணிக்காக வைத்திருந்த சுமார் ஒரு டன் இரும்பை சரக்கு வாகனத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1லட்சம் ஆகும். இதுகுறித்து காற்றாலை நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரியும் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த பெருமாள் மகன் பொன்ராஜ் (30) என்பவர் சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குளத்தூர் அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன்கள் கணேசன் (42), பேச்சிமுத்து (40) மற்றும் ஒருவர் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதில் அண்ணன், தம்பி இருவரையும் போலீசார் கைது செய்து, ஒரு டன் இரும்பு, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மேலும் வருவரை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.