கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவாலயத்தில் நள்ளிரவில் காணிக்கை பெட்டியை உடைத்து பணம் திருடிய மஞ்சுமலை என்ற பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வண்டிப்பெரியார் மஞ்சு மலை என்ற பகுதியை சார்ந்த ஆனந்தகுமார் என்பவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு காலையிலிருந்து மது போதையில் சுற்றியதாகவும் இரவில் மதுபானம் வாங்குவதற்கு காசு இல்லை என்பதால் தேவாலய காணிக்கை பெட்டியை உடைத்து பணத்தை திருடி உள்ளார். உடனடியாக காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறை அடுத்த நாளே வீட்டில் பதுங்கி இருந்த ஆனந்த குமாரை எஸ்.ஐ ராதா கிருஷ்ணன் பிள்ளை தலைமையில் திருடனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.