பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமரா மருத்துவர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர், பயிற்சி மாணவிகள், அலுவலகப் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சுத்தம் செய்யும் பொழுது ரகசிய கேமரா கண்டெடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கடந்த 28-ம் தேதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டதில் ரகசிய கேமரா வைத்தது அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் (33) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து மருத்துவர் வெங்கடேஷிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமேசான் ஆன்லைன் செயலியில் ரகசிய பேனா கேமராவை வாங்கி கழிவறை சுத்தம் செய்யும் பிரஸ்ஸில் பொருத்தி வைத்ததை ஒப்புக்கொண்ட நிலையில் மருத்துவர் வெங்கடேசனை கைது

(விளம்பரம்)

செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து மொபைல்போன் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
-M. சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp