பல்லடம் ஒன்றியம்-இச்சிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது!!

திருப்பூர் மாவட்டம்-பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சி -கோம்பக்காட்டுபுதூர் பகுதியில் உள்ள சிவசக்தி மஹால் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வே.கனகராஜ்-அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த முகாமானது நேற்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 3 வரை நடைபெற்றது.
இந்த முகாமில் திமுக கட்சியின் திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளரும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ்-அவர்கள் பங்கேற்று ஆய்வு செய்தார்.அப்போது உடனடியாக தீர்வு காணப்பட்ட 12 மனுக்களை வழங்கிய பயனாளிகளுக்கு உத்தரவை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, கூட்டுறவுத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 18 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த முகாமில் மொத்தம் 1064 மனுக்கள் பெறப்பட்டன. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில் உடனடியாக 12 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த முகாமில் பல்லடம் தாசில்தார் சபரிகிரி-அவர்கள்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலவேணி-அவர்கள், தர்மன்-அவர்கள், இச்சிப்பட்டி ஊராட்சி செயலாளர் கே.சி.நேரு-அவர்கள் மற்றும் திமுக கட்சியின் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம்-அவர்கள், ஒன்றிய துணைச்செயலாளர் இச்சிப்பட்டி கா.சிவக்குமார்-அவர்கள் ,திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts