எட்டயபுரத்தில் சேதமடைந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் வட்டாட்சியரிடம் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள நியாய விலை கடை கட்டிடம் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில் தற்போது கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து, சுவர்கள் பெரும்பளவில் விரிசல் அடைந்து மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இக்கட்டிடத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் தொடர்ந்து ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய நியாய விலை கட்டிடம் கட்ட வேண்டும் என்று அதிமுக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உட்பட கட்சியினர் சேதமடைந்த கட்டிடத்திற்கு மாற்றாக உடனடியாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள நியாய விலை கடையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts