கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா (ஜீலை 21) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர் மெகராஜ் பானு தலைமை வகித்து மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை சார்ந்த கருத்துக்களையும் அறிவியலில் புதுமைகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் ராக்கெட் தொழில் நுட்பம் குறித்தும், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்து கூறி அறிவியல் மனப்பான்மையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா வானவில் மன்றத்தின் நோக்கம் குறித்து பேசும் பொழுது
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும்.
குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும் என பேசினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கலா ராணி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மலர்க்கொடி பள்ளி மேலாண் குழு முன்னாள் மாணவர் உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீகச் செல்வி மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தார். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts