கொத்தடிமைகளாக வேலை செய்கிறோம்! – தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கதறல் வால்பாறையில் என்ன நடக்கிறது..? ஏன் இப்படி சொல்கிறார்கள்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அருகே வரட்டுப்பாறை காப்பி எஸ்டேட்டில் நேற்று காப்பி தோட்ட தொழிலாளர்கள்; “நாங்கள் கொத்தடிமைகளாக எஸ்டேட்டில் வேலை செய்கிறோம். எஸ்டேட் மேலாளர் மரியாதை இல்லாமல் பேசுவதும் மது அருந்திவிட்டு வேலை பார்ப்பதும் எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது. நாங்கள் இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என்று இருந்தும் ஆனால் இது தொடர் கதையாகவும், அதிகமாகும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் நாங்கள் யாரும் இன்று வேலைக்கு போகவில்லை” என்று தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் தொழிற்சங்க தலைவர் L P F சௌந்தர பாண்டியன், CITU பரமசிவம், ATP ஜெகநாதன் மற்றும் எஸ்டேட் நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டு இதுகுறித்து பேசினார்கள்.

இதற்கிடையில் தொழிற்சங்க தலைவருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இறுதியில் எல்லோரும் நிர்வாகத்திற்கு வேலை செய்கிறோம் இதில் ஏதாவது தவறுகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கள் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று நிர்வாக தரப்பு கூறினார்கள்.

இனியும் இது மாதிரி நடக்காது என்றும் கூறினார்கள் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு சென்று விட்டனர் இது தொடர்பாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர் கூறுகையில் எஸ்டேட் மேலாளர் தன்னிச்சையாக ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்தி தகாத வார்த்தையில் பேசுவார் அவரை எதிர்த்து நியாயம் கேட்பவரிடம் காரணம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார் அதற்கு பதில் கொடுக்க முடியாமல் நாங்கள் பயந்து விடுகிறோம். ஒரு சில பேரை காரண விளக்கம் நோட்டீஸ் கொடுத்தும் காவல் நிலையத்தில் புகார் செய்து அதற்கு தகுந்த ஆதாரத்தை ரெடி பண்ணி எஸ்டேட்டில் வேலை செய்ய விடாமல் பண்ணிவிட்டார் என்ன செய்வது இவர்களுக்கு சாதகமாக தொழில் சட்டம் தொழிலாளர் நலச் சட்டங்களும் உள்ளது எங்கள் தலையெழுத்து இன்னும் வருங்காலங்களில் இதைவிட மோசமாக இருக்கும் என்று கூறினார்கள்.

இது தொடர்பாக ஆய்வு செய்ததில் தொழிலாளர்கள் சந்தாவை எஸ்டேட் நிர்வாக உதவியுடன் தனது சம்பளத்தில் தொழிற்சங்கத்திற்கு பிடித்துக் கொடுப்பதால் எஸ்டேட் நிர்வாகம் சொல்வதை தான் தொழிற்சங்கங்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தொழிலாளர்கள் எப்பொழுது தனது சந்தாவை முகம் பார்த்து நேரடியாக தொழிற்சங்க தலைவரிடம் கொடுக்கிறார்களோ அப்பொழுது தான் இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்பது தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் வரும் காலங்களில் தொழிலாளர்கள் சந்தாவை எப்படி செலுத்துகிறார்கள், தொழிற்சங்க தலைவர்கள் எப்படி சந்தாவை வாங்குகிறார்கள் என்று.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts