கோவில்பட்டியில் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்!!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டி நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் போட்டியான திருப்பூர் – ராணிப்பேட்டை இடையிலான போட்டியை துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார். இதில் நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சாமி ராஜன், வேல்முருகன், ரவி, வெங்கடேஷ் தலைமையாசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, காளிமுத்து, பாண்டிராஜா , தூத்துக்குடி துறைமுக ஹாக்கி பயிற்சியாளர் ராஜா, குமார் ஆகியோர் வரவேற்று வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர். நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார் , கூத்துராஜன்,ராம்குமார்,வேல்முருகன், மகேஸ்வரி, உமாதேவி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts