
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாநில துணை தலைவர் சகோதரர் திரு.ஆ.பழனிச்சாமி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துதல் தூத்துக்குடியில் ஹரீஷ் மீட்டீங் ஹாலில் வைத்து நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ.கற்குவேல் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.லட்சுமி, முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.கசாலிமரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் திரு.வெ.வேல்முருகன் , மாநில செயற்குழு உறுப்பினர் திரு.மு.கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூட்டத்தில் அனைவரும் காலஞ்சென்ற மாநில துணை தலைவர் திரு.ஆ.பழனிச்சாமி அவர்களுடைய மலர் அஞ்சலி செலுத்தி அவர் சங்கத்தை கட்டிக்காத்தது குறித்தும் பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்தனர்.
மேலும் 23.08.2025 அன்று திருச்சியில் நடைபெறும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் பெருமளவில் பணியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும்.உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் திரு.இசக்கிமுத்து(ஓட்டப்பிடாரம்) ,திரு.சிவபாலன்(கோவில்பட்டி), திரு.கிருபாபெஞ்சமின்(விளாத்திகுளம்), திரு.முத்துக்கண்ணன்(புதூர்), திரு.வெள்ளத்துரை(ஆழ்வார் திருநகரி) ,திரு.அருள் (உடன்குடி) , மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.பாலமுருகன், மாவட்ட இணை செயலாளர் கருங்குளம் முருகன் உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு அனைவரும் நினைவஞ்சலி செலுத்தினர். முடிவில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொருளாளர் திரு.சண்முகராஜ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











